October 12, 2017
tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி – 20 இலைகள்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
பஜ்ஜி மாவிற்கு
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பஜ்ஜி மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கற்பூரவள்ளி இலை பஜ்ஜி ரெடி!!!