January 25, 2018 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
பால் – 3 கப்
தாமரை விதை – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை
பாதாம் – 5-6 (பொடித்தது)
முந்திரி – 5-6 (பொடித்தது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாமரை விதையை போட்டு 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து, ஒருதட்டில் போட்டு குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிது பாலில் குங்குமப்பூவை போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது சுண்டி கெட்டியாகும் போது, அதில் பொடி செய்து வைத்துள்ள தாமரை விதையை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும், குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கிவிட்டு, பின் அதில் பாதாம், முந்திரி, ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை தூவினால், சுவையான தாமரை விதை பாயாசம் ரெடி!!!