January 28, 2017
koodal.com
தேவையான பொருட்கள்:
இனிப்பான மாம்பழங்கள் – 4.
சர்க்கரை – 150 கிராம்.
பால் – அரை லிட்டர்.
உடைத்த முந்திரிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
உலர்ந்த திராட்சை – அரை டேபிள் ஸ்பூன்.
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு.
செய்முறை:
மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.