• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதினா சிக்கன் குழம்பு

April 25, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

சீரகம் – 1 டீஸ்பூன்.

சிக்கன் – 1/2 கிலோ.

தண்ணீர் – தேவையான அளவு.

எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப.

மசாலாவிற்கு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

பட்டை – 1 இன்ச்.

சோம்பு – 2 டீஸ்பூன்.

இஞ்சி – 1 துண்டு.

பூண்டு – 4 பற்கள்.

வெங்காயம் – 1 (நறுக்கியது).

பச்சை மிளகாய் – 4-5 (நறுக்கியது).

புதினா – 2 கப்.

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் புதினாவை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெண்ணெய் மசாலாவிலிருந்து வெளியே வரும் நிலையில் இருக்கும் போது, சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், புதினா சிக்கன் குழம்பு ரெடி!!!

மேலும் படிக்க