October 11, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது).
புதினா – ஒரு கைப்பிடி.
பூண்டு – ஐந்து பல்.
சீரகம் – ஒரு டீஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்.
சோல மாவு – இரண்டு டீஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
புதினா, பூண்டு, சீரகம், உப்பு, எலுமிச்சை பழம் சாறு, சோல மாவு கரைச்சல் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு, அதில் நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து கிளறி இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உதிரிஉதிரியாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சாசுடன் பரிமாறவும்.