February 6, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – பத்து (கொட்டை நீக்கி, துருவியது).
பாசுமதி அரிசி – ஒரு கப் (இருபது நிமிடம் ஊறவைத்தது).
துருவிய தேங்காய் – கால் கப்.
பச்சை மிளகாய் – இரண்டு.
எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
வேர்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்.
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை
ஊறவைத்த பாசுமதி அரிசியை உதிரிஉதிரியாக சாதம் வடித்து எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேர்கடலை, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும்.பாசுமதி வடித்த சாததை வதக்கிய கலவையில் கொட்டி உதிரி உதிரியாக கிளறவும்.கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.