March 6, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
பழுத்த நேந்திரம் பழம் – இரண்டு.
மைதா – இரண்டு கப்.
அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்.
சர்க்கரை – நான்கு டேபிள்ஸ்பூன்.
பால் – சிறிதளவு.
எண்ணெய் – தேவைகேற்ப.
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை
பாலில் சர்க்கரை, மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள் போட்டு கலக்கவும்.நேந்திரம் பழத்தை நன்றாக பிசைந்து அதில் சேர்க்கவும்.கலவையை நன்றாக கலக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு கரண்டியாக விடவும்.உப்பி வந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.