February 22, 2017
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
மைதா மாவு – மூன்று டீஸ்பூன்.
கோக்கோ பவுடர் – இரண்டு டீஸ்பூன்.
பேகிங் பவுடர் – கால் டீஸ்பூன்.
கூக்கிங் சோடா – இரண்டு சிட்டிகை.
மில்க் மேய்டு – மூன்று டீஸ்பூன்.
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்.
டிரிங்கிங் சோடா – 3௦ மில்லி லிட்டர்.
சாக்கோ சிப்ஸ் – சிறிதளவு.
மினி சாக்லேட் பால்ஸ் – சிறிதளவு.
செய்முறை
மைதா மாவு, கோக்கோ பவுடர், பேகிங் பவுடர், கூக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சளித்து கொள்ளவும்.பின், ஒரு கிண்ணத்தில் சளித்த மாவு, மில்க் மேய்டு, எண்ணெய், டிரிங்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒருசேர கலந்து ஒரு கிளாஸ்யில் ஊற்றி மைக்ரோ வேவ் ஓவன்னில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து அதன் மேல் சாக்கோ சிப்ஸ் மற்றும் சாக்லேட் பால்ஸ் போட்டு பரிமாறவும்.