January 11, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
கடுகு எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
கருப்பு உப்பு – தேவைகேற்ப
சீரக தூள் – அரை டீஸ்பூன்
கட்டி தயிர் – இரண்டு டீஸ்பூன்
ரெட் கலர் – ஒரு சிட்டிகை
தக்காளி – இரண்டு துண்டு (வட்டமாக நறுக்கியது)
பன்னீர் துண்டு – ஐந்து (வட்டமாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் – இரண்டு துண்டு (வட்டமாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
லாங் ஸ்டிக் – ஒன்று
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய், கரம் மசாலா, கருப்பு உப்பு, சீரக தூள், கட்டி தயிர், ரெட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, பன்னீர், குடைமிளகாய், தக்காளி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். லாங் ஸ்டிக்கில் வெண்ணெய் தடவி குடைமிளகாய், பன்னீர், தக்காளி, பன்னீர், தக்காளி, பன்னீர், குடைமிளகாய் ஆகியவற்றை ஒவொன்றாக குத்தி வைத்து கொள்ளவும். பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வந்தவுடன் சாசுடன் பரிமாறவும்.