October 23, 2018 tamil.webdunia.com
தேவையான பொருட்கள்:
இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 நடுத்தரமானது
இஞ்சி அரைத்து – 1/2தேக்கரண்டி
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.அது சூடானவுடன் சோம்பு போடவும்.லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை,பச்சை மிளகாய் போடவும்.நன்றாக வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை போடவும் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளியை போடவும்.
தக்காளி போட்டதும் அதனுடன் உப்பு,மிளகாய் தூள்,தனியாத் தூள்,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து முதல் 15 நிமிடங்கள் வதக்கினால் போதும்.இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும்.இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான இறால் தொக்கு தயார்.