தேவையான பொருட்கள்:
ஆட்டு எலும்பு – 250 கிராம்
எலுமிச்சை பழம் – 1
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டுப் பல் – 4
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
சாம்பார் வெங்காயம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி,குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும்.எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள்,இஞ்சி விழுது,கொத்தமல்லி,உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து,எண்ணெய் விட்டு மிளகுத் தூள்,காய்ந்த சீரகத்தூள்,பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.எழும்புத் துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.பின்பு அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம்.தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம்.சுவையான மட்டன் ரசம் தயார்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது