January 6, 2018
awesomecuisine.com
தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
சின்ன வெங்காயம் – கால் கப்
வெங்காய தாள் – அரை கப்
தேங்காய் திருவல் – கால் கப்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப்க்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடகளுக்கு, பிறகு தேங்காய் திருவல், கறிவேப்பலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடகள் கழித்து இரக்கவும்.