October 10, 2017
manakkumsamayal.com
தேவையான பொருட்கள்:
காரட்-100 கிராம்
பீன்ஸ்-100 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சோம்பு-1டேபிள்ஸ்பூன்
மிளகு-1டேபிள்ஸ்பூன்
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கிராம்பு-3
பட்டை-2
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின்பு அதில் பீன்ஸ்,காரட் போட்டு தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பின்பு பீன்ஸ்,காரட்டை தனியாக எடுத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து விட்டு கொதிக்கின்ற சூப் தண்ணீரியில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.வெஜிடேபிள் சூப் ரெடி.
(குறிப்பு வெஜிடேபிள் சூப் குழந்தைகள் உடம்புக்கு நல்லது.)