August 10, 2017
tamilboldsky.com
தேவையான பொருட்கள்
பொடித்த சர்க்கரை – 1 கப்
கடலை மாவு – 2 கப்
நெய் – 3/4 கப்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறுதளவு
நறுக்கிய பாதாம் பருப்பு (அலங்கரிக்க) – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சூடான ஒரு கடாயில் நெய்யை ஊற்ற வேண்டும்.தீயை மிதமான சூட்டில் வைத்து கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்க முடியும்.பிறகு மாவின் கலரும் அதன் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும்.
லேசாக தண்ணீர் சேர்த்து அது நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும் அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும்.அதை இன்னொரு பெளலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். இதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.இதனுடன் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும் .இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடிக்க வேண்டும்.அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.