• Download mobile app
30 Oct 2024, WednesdayEdition - 3185
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபேர்புரோ 2024 கண்காட்சி ஆக.2ம் தேதி துவக்கம்: கோவை கொடிசியாவில் 3 நாட்கள் நடைபெறுகிறது

July 31, 2024 தண்டோரா குழு

கிரெடாய் கோயம்புத்தூர், ஃபேர்புரோ 2024 வீடு வாங்கும் திருவிழா கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 2, 3 மற்றும் 4 தேதிகளில் நடத்துகிறது.

இதுகுறித்து தலைவர் குகன் இளங்கோ,
சேர்மன் சுரேந்தர் விட்டல்,ஃபேர்புரோ 2024 கண்காட்சி செயலர் எஸ்.ஆர் அர்விந்த் குமார் ஆகியோர் கூறுகையில்,

கிரடொய் அனைத்து முன்னணி டெவலப்பர்களை ஒன்று திரட்டியுள்ளது. எங்களது உறுப்பினர்கள் அதிகபட்ச சலுகைகளை இதில் அளிக்கின்றனர். வீட்டுமனைகளாக இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், வில்லாவாக இருந்தாலும் இங்கு முன்பதிவு செய்வோர், தங்களது கனவு இல்லத்துக்கு நல்ல விலையை பெறலாம்.

ஃபேர்புரோவானது,ஆண்டுக்கு ஆண்டு மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. கட்டுமான பொருட்கள்,வரிகள்,பதிவு கட்டணம், நிலமதிப்புகள் உயர்ந்து வருகின்றன. வீட்டில் முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்து விட்டால்,தாமதிப்பது விலை ஏற்றத்தை தரும்.இடம்,விலை,வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நீங்கள் வாங்கப்போகும் சொத்துக்களை ஒப்பீடு செய்து பார்க்க ஃபேர்புரோ ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு இடத்தை வாங்க நினைப்போருக்கு முடிவெடுக்க சிறப்பான இடமாக இருப்பது ஃபேர்புரோ கண்காட்சி தான்.

சிறப்பான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கண்காட்சியில்,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டைட்டில் பர்ட்னராகவும்,ஜாகுவார் மற்றும் ரெனாகான் கோல்டன் பார்ட்னராகவும் பங்கேற்கின்றனர்.30க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் 100 க்கும் மேற்பட்ட திட்டங்கள்.4 வங்கிகள், பிளாட் வில்லாக்கள்,கேட்டேட் கம்யுனிட்டிகள், வீட்டு மனைகள்,அடுக்கு மாடி குடியிருப்புக்கள் காட்சியில் இடம் பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், ஏஜென்டுகள்,சிறப்பான விலையில், அதிக பயனுடன் அல்லது தனித்துவமிக்க சலுகைகளுடன் வழங்குகின்றனர். இந்த ஒப்பந்தத்தில்,சொத்து மதிப்பில் தள்ளுபடி சலுகைகள்,பதிவு கட்டண தள்ளுபடிகள், பல்வேறு வசதிகள் அல்லது தவணை திட்டங்கள்,குடும்பத்தினர், தனி நபர்கள் சொத்துக்களை தேர்வு செய்ய உகந்த விழா என்றனர்.

மேலும் படிக்க