• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவில் செங்கோட்டையன் உள்பட 13 அமைப்புச் செயலர்கள்

February 3, 2017 தண்டோரா குழு

அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்பட 13 பேர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அதிமுக பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பின் வி.கே. சசிகலா அறிவித்துள்ள மிக முக்கியமான கட்சி நிர்வாகிகளின் நியமனம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க- வில் சில தலைவர்கள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர் என்றும் சிலர் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களைத் திருப்திப்படுத்தவும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நோக்கத்துடனும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இவ்வாறு கட்சிப் பொறுப்புகளை சசிகலா அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நியமனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட சசிகலா,

“அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு கீழ்க்காணும் கழகத்தினர் நியமிக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி கட்சியின் தீவிரப் பணிகளிலிருந்து ஒதுங்கியதாகக் கூறப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கோகுல இந்திரா, முன்னாள் மேயர் சைதை துரைசாமி போன்றோருக்கு கட்சியின் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. பதவி பெற்றவர்கள் விவரம்:

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ். கோகுல இந்திரா, பி,. வி. ரமணா, வி. சோமசுந்தரம், புத்திசந்திரன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் வரகூர் அருணாசலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். நிறைகுளத்தான், எஸ். அன்பழகன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே. அண்ணாமலை,கே.கே. உமாதேவன், வி. கருப்புசாமி பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.எம். நரசிம்மன் எம்.எல்.ஏ.வும் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளராக முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ஆர். சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராக காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. என்.முருகுமாறன் (கடலூர் மேற்கு மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ஜெயகுமார்:

மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் கட்சியின் மீனவர் பிரிவுச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால் (நாகப்பட்டினம் மாவட்டம்), நீலாங்கரை முனுசாமி (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்), முன்னாள் எம்எல்ஏவான கே. குப்பன் (திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்) ஆகியோர் மீனவர் பிரிவு இணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி மாநகர் மாவட்டம்) கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச் செல்வன் (விருதுநகர் மாவட்டம்) கட்சியின் இலக்கிய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கழக இலக்கிய அணியின் இணைச் செயலாளராக கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் டாக்டர் கோ. சமரசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர மேலும் சில நியமனங்கள், பதவி மாற்றங்களையும் சசிகலா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. விவரம்:

எஸ்.கே. செல்வம் – கழக புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் (வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சேலம் புறநகர் மாவட்டம்)

அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி. அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., (இவர் ஏற்கனவே வகித்து வரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்)

அ.தி.மு.க. மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நீலாங்கரை எம்.சி.முனுசாமியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

மேலும் படிக்க