• Download mobile app
22 Jan 2025, WednesdayEdition - 3269
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமலாக்க துறை ரெய்டில் சிக்கிய மணல் மாபியாக்களுக்கு கோவையில் நூதன போஸ்டர்

September 3, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கனிம வள பொருட்கள் எடுப்பதில் சப்ளை செய்வதில் புரோக்கர்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.ராயல்டி, கிராவல் மண் எடுப்பது போன்றவற்றில் இவர்களின் தலையீடு உச்ச கட்டமாக இருப்பதாகவும்,பல லட்ச ரூபாய் முறைகேடாக வசூலித்து வருவதாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவோர் புகார் கூறி வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிலர் கோவை மாவட்டத்தில் முகாமிட்டு கனிமங்களை சப்ளை செய்வதில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக, தினசரி பணம் வசூலிப்பதாக தெரிகிறது. இவர்களின் உத்தரவின் படியே கனிம பொருட்கள் சப்ளை நடப்பதாக புகார் எழுந்தது.

இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனிம பொருட்கள் விவகாரம் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்ட மணல் மாபியா கும்பலே வருக, கனிம வளத்துறையை ஆட்சி செய்யும் அரசர்களே வருக ,கனிமவளத்துறை அமைச்சரே,கோவை மாவட்ட கலெக்டரே வருக வருக..என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த போஸ்டரில் கடந்த ஆண்டில் மணல் குவாரி விவகாரங்களில் முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்க துறையின் (ED) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த குத்தகைதாரர் கரிகாலன்,கோவிந்தராஜ் மற்றும் செல்வம் ஆகியோரின் போட்டோக்கள் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் எங்கே அச்சிடப்பட்டது,யார் ஓட்டினார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுந்தராபுரம், போத்தனூர், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஒட்டியிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து வீசினர்.

இது தொடர்பாக கிராவல் மண் சப்ளை லாரி உரிமையாளர்கள் மற்றும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில்,

“கோவை மாவட்டத்தில் கிராவல் மண் மற்றும் பல்வேறு கனிம பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த புரோக்கர்கள் புகுந்து பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கின்றனர். அனுமதியின்றி கல், மண் எடுப்பதாக மிரட்டுகிறார்கள். தொழில் நடத்த விடாமல் புரோக்கர்கள் தலையீடு செய்கிறார்கள். கோவையில் 3 புரோக்கர்களின் ஆட்கள் தான் அதிகார மையங்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பாஜகவினர் உதவி இருப்பதாக தெரிகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவினருக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்டதாக தெரிகிறது.

அமலாக்க துறையின் ரெய்டில் சிக்கிய புரோக்கர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர். இதற்கு நன்றி கடனாக தான் இவர்கள் பாஜகவிற்கு உதவியாக தகவல் வந்திருக்கிறது. கோவைக்கு இந்த புரோக்கர்கள் அடிக்கடி வந்து மிரட்டல் விடுத்து போகிறார்கள். செல்வம் என்பவர் அமலாக்க துறை ரெய்டிற்கு பயந்து 3 மாதமாக தலைமறைவாக இருந்தார். இப்போது வந்து விட்டார்.கிராவல் மண் எடுக்க யூனிட்டிற்கு 400 ரூபாய் வசூலிக்கிறார்கள்.இதை தெரிந்து யாரோ சிலர் இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். இந்த போஸ்டரில் உள்ள தகவலகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகத்தினர் விசாரித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளத்துறையின் அதிகாரத்தில் தலையிடுபவர்களை தடுக்க அரசு முன் வரவேண்டும், என்றனர்.

கனிமவளத்துறை முறைகேடுகளை கண்டித்து ஆட்சி செய்யும் அரசர்களே என அச்சடித்து ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கோவையை பரபரப்பாகியுள்ளது.

மேலும் படிக்க