• Download mobile app
05 Feb 2025, WednesdayEdition - 3283
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அல்ட்ராவயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அனுபவ மையம் கோவையில் திறப்பு

December 12, 2024 தண்டோரா குழு

அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வயலட் கோவையில் அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் அனுபவ மையத்தில் திறந்துள்ளது. இந்த மையம் விற்பனை, சேவை மற்றும் உதிரி பாகங்கள் என 3 வசதிகளைக் கொண்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் விதமாகவும் கோவையில் புதிய அனுபவ மையத்தை திறந்தது இங்கு இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை,சேவை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட உள்ளது , இந்த மையம்,வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு இதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இந்நிறுவனம் தங்களது அனுபவ மையங்களை திறந்து வருகிறது.கோவையின் மையப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்ட்ராவயலட்டின் முதன்மையான உயர் செயல்திறன் மோட்டார் சைக்கிளான எப் 77 மேக் 2 குறித்து அறிந்து கொள்வதோடு அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.இங்கு பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது .

இது குறித்து அல்ட்ராவயலட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நாராயண் சுப்ரமணியம் கூறுகையில் ,

கோவையில் எங்களின் இந்த மையம் திறக்கப்பட்டு இருப்பது என்பது இந்தியா முழுவதும் எங்களின் மின்சார மோட்டார் சைக்கிள் விற்பனையை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு மைல்கல் ஆகும். ஆட்டோமொபைல் மற்றும் என்ஜினியரிங் துறையில் கோவை நகரம் பாரம்பரியமாக விளங்கி வருகிறது . எனவே எங்களின் மையத்தை இங்கு திறப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2 வாரங்களில் கோவையில் திறக்கப்படும் இந்த மையம் எங்களின் 2 வது மையம் ஆகும் இங்கு வாடிக்கையாளர்கள் எங்களின் எப் 77 மேக் 2 மோட்டார் சைக்கிளை நேரடி பார்த்து அவற்றின் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

எப் 77 மேக் 2 மோட்டார் சைக்கிள் , 40.2 எச்பி மற்றும் 100 என்எம் முறுக்குவிசையுடன் கூடிய மின் செயல்திறனை கொண்டுள்ளது. இது வெறும் 2,8 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது . இதில் 10.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 323 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.

எல்இடி விளக்குகள்,புளூடூத் இணைப்புடன் கூடிய டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , பல்வேறு பயண முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளது.

இது குறித்து அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் கூறுகையில்,

கோவையில் திறக்கப்பட்டுள்ள எங்களின் இந்த மையம் புதுமை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த அனுபவ மையம்,எங்களின் முதன்மை மோட்டார் சைக்கிளான எப் 77 மேக் 2 குறித்தும் , அதன் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவை குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விளக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது . நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்மயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க