• Download mobile app
30 Oct 2024, WednesdayEdition - 3185
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா

January 9, 2024 தண்டோரா குழு

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் (BIS) கோயம்புத்தூர் கிளையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கவிழா இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோயம்புத்தூர் அறிவியல் மற்றும் தொழில்துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோகன் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில்,

“இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் தரமுடையவையாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இந்தியப் பொருட்கள் நுகர்வோரால் விரும்பி வாங்கப்படும் நிலை உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாவதற்கு இந்தியப் பொருட்களின் தரம் இன்றியமையாதது என்றும் குறிப்பாக மாணவ,மாணவியர்களுக்குத் தரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி இவ்விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார்.

அவர்தம் உரையில், ” கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கல்லூரியில் கொண்டாடப்படுவதற்கு நன்றிர தெரிவித்தார்.

வருங்கால பாரதத்தை உருவாக்குவது இன்றைய இளைஞர்களின் கைகள் என்றும் அவை இளமையாகவும் தூய்மையாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தரம் குறித்த செய்திகளை அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர் உள்ளிட்ட நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் ” என்றும் கூறினார்.

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் கோயம்புத்தூர் கிளையின் தலைவரும் G பிரிவு விஞ்ஞானியுமான கோபிநாத் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.லச்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக B பிரிவு விஞ்ஞானி கே.கவின் வரவேற்புரையாற்றினார். இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் பொறியாளர் திவ்யப்பிரபா நன்றி தெரிவித்தார்.

தொடக்கவிழாவைத் தொடர்ந்து இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.மேலும் , தரப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வினாடி – வினா,பேச்சுப் போட்டி,பதாகை தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலிருந்து மாணவ , மாணவியர் திரளாகப் பற்கேற்றனர்.

மேலும் படிக்க