• Download mobile app
03 Jan 2025, FridayEdition - 3250
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆலோசகர் என்ற தலைப்பில் ஆலோசகர்களுக்கான பயிற்சி

November 1, 2023 தண்டோரா குழு

பூ.சா.கோ செவிலியர் கல்லூரியும், (BPNI)யும் இணைந்து,“தாய்ப்பால், குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆலோசகர்” என்ற தலைப்பில் ஒரு வாரம் ஆலோசகர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சியானது தாய்ப்பாலுட்டுதலையும், அதன் திறன்களையும்,இணை உணவுகளையும்,எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மற்றும் குழந்தைகளுக்கு உணவளித்தளையும் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பை மையமாக கொண்டு BPNI யின் தேசிய பயிற்சியாளர்கள் குழுவால் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்,இப்பயிற்சியின் தொடக்க விழாவானது அக்டோபர் 30 ஆம் தேதி பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்றது. பேராசிரியர் டாக்டர் அ.ஜெயசுதா, பூ.சா.கோ செவிலியர் கல்லூரியின் முதல்வர்,இவ்விழாவினை துவங்கி வரவேற்புறையாற்றினர்.மேலும் அவர், பூ.சா.கோ நிறுவனங்களின் வளர்ச்சியையும், பயணங்களையும், பூ.சா.கோ மருத்துவமனையின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

டாக்டர்.மஞ்சு பாலா தாஷ், பேராசிரியர், அன்னை தெரசா முதுகலைப் பட்டதாரி மற்றும் பாடநெறி ஒருங்கிணைப்பாளர், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்கவும், மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பவுடர் பால் வழங்கும் நடைமுறையை தவிர்க்கவும் வலியுறுத்தினார், பிரத்தியேகமாக தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்குமாறும் எடுத்துரைத்தார் மற்றும் இப்பயிற்சி மருத்துவதுறை மற்றும் அல்லாமல் அனைத்து துறைகளுக்கும் பொதுவனது என வலியுறுத்தினார்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கவும் பங்கேற்ப்பாளர்களை ஊக்குவித்தார்.Dr.T.V .சித்ரா பாட் பேராசிரியர் மற்றும் மகப்பேறு மருத்துவ துறை பிரிவு தலைவர், பூ.சா.கோ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர். இவ்விழாவினில் பூ.சா.கோ செவிலியர் கல்லூரியானது BPNI’s “தாய்ப்பால், குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆலோசகர்” பயிற்சியை நடத்துவதற்காகப் பாராட்டினார் மற்றும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து இப்பயிற்சியில் பங்கேற்ப்பாளர்களின் ஆர்வத்தை பாராட்டினார்.

Dr.A.ஜெயவர்தனா, MD, பேராசிரியர் & குழந்தைகள் நல துறை பிரிவு தலைவர், PSG IMS&R மருத்துவமனை இப்பயிற்சியை மேற்கொள்ள அதிக முயற்சி எடுத்த பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் பூ.சா.கோ நிறுவனத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தினார்.

இப்பயிற்சியில் 25 பங்கேற்பாளர்கள் பல்வேறு துறைகளிலிருந்து வந்து தாய்ப்பால், குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஆலோசகர்களுக்கான பயிற்சியில் பங்குபெற்றனர்.மேலும் அவர்கள் ஆரோக்கியமாக தாய்ப்பால் ஊட்டுவதற்கும், அதை ஆதரவளிப்பதற்கும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க