April 24, 2020
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு எம தர்மன் வேடம் மற்றும் கொரனாவை போல் இட்டு நடனமாடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் இரண்டாம் கட்டத்திலேயே உள்ளது. கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் போலீஸார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. அதில் எம தர்மன் வேடத்தில் நடித்த நபர் கொரோனா தாக்கம் குறித்தும்,பொதுமக்கள் தனித்து, விழித்து, இருந்து வெளியில் வருவதை தவிர்க்க வலியுறுத்தியும்,பொதுமக்கள் வெளியில் வந்தால் கொரோனா தொற்றினால்,தூண்டில் போட்டு பிடிப்பது போலவும்,அதன் விளைவுகள் குறித்தும்,பாடல்கள் மூலமும்,நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் இருசக்கர வாகனத்தில் வரும் மனிதர்களை கொரனா தாக்குவதும்கொரனா தாக்காமல் இருக்க போலீசாரும், தூய்மை பணியாளரும், சுதரத்துறையும் பணியில் ஈடுபடுவது போல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு என சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு நாடக வடிவில் சாலைகளில் வரும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.