• Download mobile app
15 Jan 2025, WednesdayEdition - 3262
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண்களுக்கான ‘ரங்’ ஆடை-அணிகலன்கள் கண்காட்சி

October 11, 2023 தண்டோரா குழு

கோவையில் ‘ரங்’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஆடை-அணிகலன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ‘ரங்’ என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவந்தா ஹோட்டலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த விற்பனையாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில் சேலைகள், சுடிதார், மேற்கத்திய ஆடைகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், வெள்ளி அணிகலன்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

இங்கு ரூ.500 முதல் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வெள்ளி நகைகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் பொது மக்களுக்கு சிறப்பு சலுகைகள் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியை மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ரிதிஷா நிவேதா, ஜூவல்லரி துறையை சேர்ந்த அபர்ணா சுன்கு, சங்கீதா பீட்டர், அமிதி நிறுவன இயக்குனர் ஸ்ரீ நிதி ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ‘ரங்’ கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆயுஷி, கரிஷ்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க