• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன் முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணம் சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்  

November 3, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டுவரும் அழகு மேம்படுத்தலுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைமையமான சிற்பி ஏஸ்தேடிக்ஸ் எம்பரேஸ் RF (Embrace RF) எனும் அறுவை சிகிச்சை அல்லாத முகம் மற்றும் உடல் வரையறை சாதனத்தை கோவையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.  

இந்த அறிமுக நிகழ்வு சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தின் நிறுவனர் டாக்டர் A.R. ஸ்ரீகிரீஷ்,ராயல் கேர் மருத்துவமனையின் ரேடியோலஜிஸ்ட் டாக்டர் பி.வீணாசங்கரி, இருவரின் பெற்றோர் மற்றும் முக்கிய மருத்துவ குழுவினருடன் நடைபெற்றது.  

இது குறித்து டாக்டர் A.R. ஸ்ரீகிரீஷ் பேசுகையில்,

சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகளை சிறந்த முறையில் வழங்க உதவும் மருத்துவ உபகரணங்களை நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம்.அந்த வகையில் கோவையின் முதலாவதும் தமிழ்நாட்டில் நான்காவதுமான எம்பரேஸ் RF கருவியை இங்கு அறிமுகம் செய்வதில் எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி,என்றார். 

“பிப்ரவரி 2023 இல் சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தை நாங்கள் இங்கு தொடங்கினோம்.எங்களுடைய அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன், ஆண்,பெண் என இருபாலருக்கும் முகம், மார்பு, உடல்,முடி ஆகிய பகுதிகளில் அவர்களுக்கு தேவைப்படும் அழகு மற்றும் தோற்றம் சார்ந்த மாற்றங்களுக்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். இதனால் அவர்கள் தங்கள் தோற்றம் குறித்து தன்னம்பிக்கையுடன் உணர்கின்றனர்.” என்றார்.  

புதிய Embrace RF கருவி குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்த இயந்திரம் ரேடியோ அலை வரிசையைப் பயன்படுத்தி சருமம்,மார்பு,உடல் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மாற்றத்தை வழங்க உதவும்.முகப்பரு தழும்புகளை நீக்குதல்,வயிற்றில் உள்ள நீட்சிக்குறிகள், கை,வயிறு மற்றும் மார்பு பகுதியில் இறுக்கம் சிகிச்சை, தோல் சுருக்கம் நீக்குதல் உட்பட பல தீர்வுகளை வழங்க முடியும்.இதை கொண்டு நுண்துளை அறுவை சிகிச்சையும், அறுவை சிகிச்சை அல்லாத தீர்வுகளையும் வழங்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

மேலும் தகவலுக்கு : 87780 73927

மேலும் படிக்க