• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்

January 4, 2024 தண்டோரா குழு

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் உடனடியாக பணி நியமன நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரியில் கையெழுத்து இயக்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் நடைபெற்றது.இதில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலரும் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க