March 24, 2022
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கொடியசைத்து துவக்கி வைத்தார்.அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியானது கலைக்கல்லூரி வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் காச நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தான பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினையொட்டி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் தின விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது.