• Download mobile app
02 Jan 2025, ThursdayEdition - 3249
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இராமநாதபுரம் மண்டல் 66வது வார்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீர்ர்கள் கூட்டம்

January 8, 2024 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரம் மண்டல் 66வது வார்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீர்ர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவராக அண்மையில் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற அவர்,நம்மை காண நம்ம தலைவர் என்ற நிகழ்ச்சியின் மூலம், ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரடியாக சென்று, ட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்,கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க.தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் மண்டல் 66 வது வார்டு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் அம்மன்குளம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இராமநாதபுரம் மண்டல் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில்,பா.ஜ.க.கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு வார்டு மற்றும் பகுதி நிர்வாகிகளிடையே பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறை பாரத பிரதமராக நரேந்திர மோடி ஜி தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.அதே நேரத்தில் நமது பணியாக நமது பகுதிகளில் அதிக உறுப்பினர்களை சேர்க்கவும், தேர்தல் நேரத்தில் அதிக வாக்குகளை சேகரிக்க மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் தம்பி என்கிற மருதாசலமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதாகர், விஜயாரவி,தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் முரளி, ஏ.டி.ராஜன், மண்டல் செயலாளர் ஜெகதீஸ், மாவட்ட சிந்தனையாளர்கள் பிரிவு பாஸ்கரன், சக்திவேல் அண்ணாச்சி, ராம்போ சுப்பிரமணி, கங்காதரன் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க