• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையம் துவக்கம்

March 9, 2024 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையத்தை அமைப்பதற்கு புது டெல்லியில் உள்ள ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் (AMHSSC) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய மையத்திற்கான துவக்க விழா கிருஷ்ணம்மாள் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.முன்னதாக புதிய மையத்தை,மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி,மற்றும் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் சேர் பெர்சன் டாக்டர் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல்,

நாடு முழுவதும் உள்ள இது போன்ற திறன் கவுன்சில் பயிற்சி மையங்களில் அதிகம் பயிற்சி பெறுவது பெண்களே என்று குறிப்பிட்ட அவர்,பனியன் ஏற்றுமதி வணிகத்திற்கு பெயர் போன திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களின் பங்களிப்பே அதிகம் என பெருமை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி,தற்போது இந்த கல்லூரி வளாகத்தில் துவங்கி உள்ள திறன் பயிற்சி மையத்தை மாணவிகள் சரியான முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், வளர்ந்து வரும்ஙஉலக நாடுகள் வரிசையில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, கல்லூரியின் செயலாளர் டாக்டர் யசோதா தேவி நன்றியுரை வழங்கினார்.புதிதாக துவங்கப்பட்டுள்ள மையம் வாயிலாக, மாணவிகளின்,திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சந்தை பகுப்பாய்வு மாணவர் மற்றும் தொழில் திட்டங்கள் மூலம் புதிய தயாரிப்பு மேம்பாடு ,ஸ்டார்ட் அப்களுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை மேம்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க