• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பில் தொகை சீனியாரிட்டி படி வழங்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தல்

January 12, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் பில் (பட்டியல் ) தொகை முறையாக சீனியாரிட்டி படி வழங்காமல் பாரபட்சமாக ஒரு சிலருக்கு மட்டும் தொகை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சீனியாரிட்டி படி முறையாக பில் தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். அவருக்கு சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் கேசிபி இன்பரா நிறுவனர் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் ராபர்ட் ராஜா மற்றும் பி அண்ட் சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பில் தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவற்ற பணிகளுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது இதனையும் தாமதம் இன்றி விரைவாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க