• Download mobile app
03 Jan 2025, FridayEdition - 3250
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் – மானிஷ் ஜோஷி

November 19, 2023 தண்டோரா குழு

“காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுள்ள புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்விநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன,” என, பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பல்கலைக்குழு மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி நிருபர்களுக்கு அளித்தபேட்டி:

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்விநிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.மாணவர்களுக்கு உயர்கல்வி தருவதில் ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.தற்போதுள்ள பயின்று வரும் மாணவர்கள், கல்வி முறையில் எளிமையையும், பல்வேறு வகையான வாய்ப்புகளையும், சுதந்திரமாக செயல்படும் கல்வி முறை வேண்டும் என்ற நிலையையும் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பிற்கு ஏற்ற வகையில், புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

மாணவர்கள் இந்த கல்வியோடு, வேறு பாடங்களையும் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.இந்த விருப்பத்தை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உதவுகிறது.மாணவர்களை மையப்படுத்தி இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.
முன்பிருந்த கல்விமுறையில் பொருளாதாரம்,இயற்பியல், பொறியியல் வேதியியல், இசை, யோகா என பல்வேறு பாடங்களில் புலமை பெற்றவர்கள் உள்ளனர்.இந்த கல்வி புலமையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய கல்வி திட்டம் வழி வகுக்கிறது.இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

ஆர்வமுடன் பங்கேற்ற இந்த மாணவர்கள், புதிய கல்வி திட்டம் பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வர். புதிய கல்வி திட்ட சாரதிகள் என அழைக்கப்படுவர்.
பாலக்காட்டில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடந்தது.

புதிய கல்வி கொள்கை திட்டம் பற்றி விளக்கம் தரப்பட்டது.மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்தாலும்,தங்களது தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.புதிய கல்வி திட்டத்தின்படி,மாணவர்களை மையமாக கொண்டது.தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.முன்பு, ஒவ்வொரு கல்வி முறைக்கும், பட்ட மேற்படிப்புக்கும் பல்வேறு கொள்கைகள் இருந்தன. புதிய கல்வி திட்டத்தில் இவை அனைத்தும் ஒங்கிணைக்கப்பட்டு அமல்படுத்தப்படும். முதல் முறையாக கேஜி வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ஒரே கொள்கை நடத்தப்படுகிறது.

பட்டப்படிப்பு படிப்போர், ஓரிரு ஆண்டுகளில் படிப்பை முடித்துக் கொண்டால், அதற்கு ஏற்ப சான்றிதழ்கள் கிடைக்கும். இந்த முறையில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு தரும் 400க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றன.இந்த புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை. காலத்துக்கு ஏற்ற இந்த கல்வி முறையை பின்பற்றுவோர், விரைவில் முன்னேற்றம் காண முடியும். தற்போதைய அவசியமும் உள்ளது. பின்பற்றாவிட்டால்,பின்தங்கிய நிலையில் தான் நீடிக்க முடியும்.மாணவர்களின் எதிர்பார்ப்பை புதிய கல்வி கொள்கை நிறைவேற்றும்.

ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறையையும், மாணவர்களை அணுகும் முறையும் வேறுபாடுகள் இருக்கும். தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் இருக்கும். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முறையில், எங்கு வேண்டுமானலும் செல்ல முடியும்; பணியாற்ற முடியும்.நேரடி பயிற்சிகளையும் பெற முடியும்.வேறு பல்கலையில் படிக்கும் மாணவர்கள்,அதில் கிடைக்கும் மதிப்புகளை தங்களது கல்வியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க