• Download mobile app
15 Jan 2025, WednesdayEdition - 3262
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரிய சாதனையாளர்களுக்கு கூட ஆட்டிசம் குறைபாடு உள்ளது – கோவையில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

April 7, 2024 தண்டோரா குழு

தேர்டு ஐ (Third Eye) எனும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டோருக்கான மையம் சார்பில் கோ ப்ளூ ஆடிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வின் இரண்டாவது பதிப்பு,இன்று காலை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்திற்கான ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தினர். 3 கிமீ வாக்தான் பாதை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் தொடங்கி ரேஸ் கோர்ஸைச் சுற்றி முடிவடைந்தது.

தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தேர்டு ஐ ஆட்டிசம் மையக் குழந்தைகள் நிகழ்த்திய மனதைக் கவரும் வரவேற்பு நடனம் மற்றும் பிரார்த்தனை பாடல் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தது.

தேர்டு ஐ மையத்தின் இயக்குனர் சரண்யா ரெங்கராஜ் கூறுகையில்,

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளடக்கத்தை ஏற்படுத்த பல ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறோம். இந்த வாக்கத்தான் என்பது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை, நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு,

ஆட்டிசம் குறித்து பெற்றோர்களுக்கு எந்த விதமான விழிப்புணர்வு இல்லை என்றும் ஆட்டிசம் என்பது மன இறுக்க நோய் மனவளர்ச்சி அடையாமல் இருப்பது என்றும்,
அதற்காக பயிற்சி கொடுப்பதற்காக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடுகள் உள்ளது என்றும் மேலும் அண்டை நாடுகளான அமெரிக்காவில் 38″குழந்தைகளில் ஒருவருக்கு இந்த ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் எந்த விதமான நம்பிக்கை இழக்கக்கூடாது உறுதியாக இருந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகளவில் பெரிய பெரிய அறிவியல் அறிஞர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரிய சாதனைகயாளர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்றும் பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இந்த நிகழ்வில் சரணாலயம் அமைப்பின் தலைவர் மற்றும் தேர்டு மையத்தின் இயக்குனருமான வனிதா ரங்கராஜ் மற்றும் குழந்தைகள் மருத்துவர் எழில் மங்கை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க