September 12, 2023
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்றுகோவை பீளமேடு பி எஸ் ஜி
மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் M.பிரதாப் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன்,பி எஸ் ஜி ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குனர் Dr.பாலாஜி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்,நிர்வாக மேலாளர் மற்றும் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்.