• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணி

October 11, 2023 தண்டோரா குழு

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச கண் பார்வை நாள் விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் துணை ஆணையாளர் க.சண்முகம் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வரும் வியாழக்கிழமை உலக கண் பார்வை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின் மீது செலுத்த வேண்டிய கவனம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த முயற்சியை முதல் முதலாக 2000-ம் ஆண்டில் சர்வதேச லயன்ஸ் கிளப் பவுண்டேஷன், பார்வைக்கு முதலிடம் என்ற பிரசாரத்தை துவக்கி ஏற்படுத்தியது.

வாசன் ஐ கேர் மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம் கிளை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ரோட்டரி கிளப் உதவியுடன் ஒரு விழிப்புணர்வு ஊர்வலத்தை இன்று நடத்தியது.இதில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி மாணவர்கள், வாசன் ஐ கேர் மருத்துவமனையின் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம், இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையாளர் க.சண்முகம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணத்தலைவர் டாக்டர் அழகு ஜெயபாலான் PMJF PDG, MC, ரோட்டரி 3201 மாவட்ட இயக்குனர் எஸ்.கோகுல்ராஜ், ஆர்சிசி தலைவர் ஆர்.டி கணேசன், கண் நரம்பியல் மற்றும் ஃபாகோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபா பால் MBBS..DO..DNB..FICO..FRCS, விழிதிரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுசா வெங்கட்ராமன் MD (AIIMS) FRCS (Glasg.), FICO (UK), DNB, கருவிழி மற்றும் கண் புறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயமணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேரணியனது வாசன் கண் மருத்துவமனை முன்பு துவங்கி ஆர் எஸ் புரம் மைதானம், ஆர் எஸ் புரம் காவல் நிலையம், தடாகம் சாலை வழியாக மீண்டும் வாசன் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதுகுறித்து கண் நரம்பியல் மற்றும் ஃபாகோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபா பால் கூறுகையில்,

இந்த உலக பார்வை நாளில், தொழிலாளர்கள், நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எங்களுடன் இணைந்து அவர்களது பார்வை நலனை மேம்படுத்த அழைக்கிறோம். வணிக நிறுவனங்கள், தங்களது அனைத்து தொழிலாளர்களின் கண் பார்வையில் கவனம் செலுத்த உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அழைக்கிறோம்.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 15ம் தேதி வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனைகளை வாசன் ஐ கேர் நிறுவனம் நடத்துகிறது. அனைத்து பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை கண்பித்து, கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க