• Download mobile app
15 Jan 2025, WednesdayEdition - 3262
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தும் ஆல்-நியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ

September 4, 2024 தண்டோரா குழு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஆல்-னியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய விளையாட்டுக் கருதுகோளை விரிவுபடுத்தும் வகையில், குஷாக் மற்றும் ஸ்லேவியா வரிசையில், ஆல்-நியூ ஸ்போர்ட்லைன் ரகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களுக்கான மதிப்பு மற்றும் தேர்வு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது.

புதிய அறிமுகங்கள் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில்,

விளையாட்டு மற்றும் வெற்றி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில்,மாண்டே கார்லோ பேட்ஜ் வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது.ஸ்லேவியா மாண்டே கார்லோவை இன்றைக்கு நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த மகிழுந்து,தனித்துவமான, நுட்பமான, வித்தியாசமான பணி மற்றும் ஸ்போர்ட்டியான அழகியலைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கான சரியான தேர்வாகும்.

இது ராலி மாண்டே கார்லோவின் 112 ஆண்டுகளுக்கும், 129 ஆண்டு வளமான பாரம்பரியத்திற்கும், இந்தியாவில் 24 ஆண்டுகளுக்கும் செலுத்தும் மரியாதை ஆகும். ஸ்லேவியா ஸ்போர்ட்லைன் மற்றும் குஷாக் ஸ்பொர்ட்லைன் ஆகிய இரு புதிய டிரிம்களையும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். மாண்டே கார்லோவின் ஸ்போர்ட்டி அழகியல் மிகவும் அணுகக் கூடிய விலையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்போர்ட்லைன் சரியான தேர்வாகும்.

புதிய மாண்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் சலுகைகளுடன் இணைந்து, இந்தியாவில் ஸ்கோடா குடும்பத்தைக் கணிசமாக வளர்க்கும் தருணத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்’ என்றார்.இந்தப் புதிய ரகத்தின் வெளியீடு, ராலி மாண்டே கார்லோவில் நிறுவனம் அறிமுகமான 112ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும். மேலும், விளையாட்டு ஈர்ப்பும், ஊக்கமும் பெற்ற மாண்டே கார்லோ மற்றும் குஷாக் & ஸ்லேவியாவின் ஸ்போர்ட்லைன் ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா, சில சலுகைகளை அறிவித்துள்ளது.

மேற்கூறிய நான்கு மகிழுந்துகளில் ஏதேனும் ஒன்றை முன்பதிவு செய்யும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு ரூ 30,000/- மதிப்பிலான சலுகைகளைப் பெறுவர். இந்த சலுகை உடனடியாக அமலுக்கு வரும். 2024 செப்டம்பர் 6 வரை செல்லுபடியாகும். இந்த மகிழுந்தில் நன்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட 1.0 மற்றும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1.0 டிஎஸ்ஐ சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் அட்டோமேடிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.5 டிஎஸ்ஐ டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் எஞ்சின், ஏழு ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூலம் முன்புறச் சக்கரங்களுக்குச் சக்தியை அனுப்பும். இந்த மகிழுந்துகள் பிரத்யேக டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும்.

மாண்டே கார்லோவின் டெயில்லைட், ஏரோ கிட் மற்றும் பிறவற்றிலிருந்து பிளாக்ட்-அவுட் வடிவமைப்பை பெறுகின்றன. ஸ்லேவியா ஸ்போர்ட்லைன் ஆர்16 பிளாக் அல்லாய் வீல்களையும், குஷா ஆர்17 பிளாக் அல்லாய் வீல்களையும் பெறுகின்றன.

மேலும் படிக்க