• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை கல்லூரியில் ஐந்தாம் பட்டமளிப்பு விழா

December 3, 2023 தண்டோரா குழு

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐந்தாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.சுந்தரராமன், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செ.பழனியம்மாள் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவிற்கு ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தம் உரையில், மாணவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.உலகில் காலடி எடுத்து வைக்கும் போது அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதை நினைவூட்டினார்.

ஆபத்துக்களை எடுக்கவும், அவர்களின் கனவுகளைப் பின்தொடரவும் பயப்பட வேண்டாம் என்று மாணவர்களை ஊக்குவித்த அவர்,உலகம் முழுவதுமாக வாய்ப்புகள் நிறைந்திருப்பதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

இவ்விழாவில் 02 தங்கப் பதக்கங்கள், 31 பல்கலைக்கழகத் தரவரிசைகள், 9 முனைவர் பட்டம் உட்பட 940 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி மலர்விழி பட்டங்கள் பெற்ற மாணவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தோடு நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக இருக்க வேண்டும். எங்கள் புகழ்பெற்ற நிறுவனத்தில் படிப்பின் போது மாணவர்களை தொழில் வல்லுநர்களாக வடிவமைக்கப் பங்காற்றிய ஆசிரிய உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க