September 11, 2017 தண்டோரா குழு
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது.
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளை புரட்டிபோட்டது.பின்னர் அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாகணத்தை தாக்கியுள்ளது. அப்போது காற்று அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் வீசியதால்,அங்கிருந்த வீடுகள் தரைமட்டம் ஆனது.கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் நொறுங்கியது.மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
‘இர்மா’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினா, அலபாமா,மற்றும் டென்னீஸ் மாகணங்களை தாக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 7 மில்லியன் மக்கள் மற்றும் ப்ளோரிடாவிலுள்ள சுமார் 6.4 மில்லியன் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்,மற்றும் ஹெலிகாப்ட்டர் மற்றும் மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.