April 21, 2017
தண்டோரா குழு
பாகுபலி படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ‘பாகுபலி உணவு தாளி’ என்ற பெயரில் உணவுவகை ஒன்றை ‘ராஜ்வாடு’ என்ற உணவகம் அகமதபாத்தில் அறிமுகமப்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளகள் ராஜேஷ் படேல் மற்றும் மனிஷ் படேல் கூறுகையில்,
பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தில்இடம் பெற்ற சண்டை காட்சிகளை மையமாக கொண்டு குஜராத்தி மற்றும் ராஜஸ்தான் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மசாலா வகைகளைக் கொண்டு பல சுவையான உணவு வகைகளை தயாரித்துள்ளோம்.
மக்கள் வழக்கமாக விரும்பி உண்ணும் உணவுகள் மற்ற கடைகளில் கிடைக்கும். அவர்களுக்கு சற்று வித்தியாசமான உணவுகளை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் விளைவுதான் ‘பாகுபலி உணவு தாளி’. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உணவுகளை விரும்பி உண்ட மக்கள் எங்களை மனமார பாராட்டினர்” என்றார்கள்.