June 29, 2023
தண்டோரா குழு
இந்திய கராத்தே சங்கம், புதுடெல்லியில் கடந்த மே 31ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை, அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில் கோவை ஆலன் திலக் சர்வதேச கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த 13 மாணவர்கள், 4 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் இந்த பயிற்சி மையத்தை சேர்ந்த எஸ்.ஜெய் ஆகாஷ், 13 வயதுக்குட்பட்டோருக்கான 40 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கமும், கே.எஸ்.வைஷ்ணவ் 14-15 வயதுக்குட்பட்டோருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும், கே.ஆர்.ஶ்ரீவர்ணா 12 வயதுக்குட்பட்டோருக்கான 40 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
போட்டியில் பதக்கம் வென்றவர்கள், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரையும், ஆலன் திலக் சர்வதேச கராத்தே பயிற்சி மைய இயக்குநர் எஸ்.பால் விக்ரமன் பாராட்டி வாழ்த்தினார்.