June 22, 2022 தண்டோரா குழு
மத்திய அரசின் அக்னிபத் திடத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) ரயில் நிலைய முற்றுகை நடத்தினர்.
மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட் செயலாளர் கனகராஜ் இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்காது என்றும் நான்கு ஆண்டுக்ள் கழித்து எவ்வித ஊவூதியம் கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் வேலையின்மை அதிகமாக உள்ள நிலையில் இராணுவத்தில் எதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர்.