• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அக்ரி இன்டெக்ஸ் 2023 வர்த்தக கண்காட்சியில் விஎஸ்டி 929 டிஐ இஜிடி டிராக்டர் அறிமுகம்!

July 17, 2023 தண்டோரா குழு

வேளாண்மை தொடர்பான அக்ரி இன்டெக்ஸ் வர்த்தக கண்காட்சியில் தனது முற்றிலும் புதிய விஎஸ்டி 929 டிஐ இஜிடி காம்பேக்ட் டிராக்டரை பெருமையுடன் அறிமுகம் செய்திருக்கிறது.

வேளாண் சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட். “அக்ரி இன்டெக்ஸ் 2023” என்ற பெயரில் வேளாண்மைக்கான இந்தியாவின் முதன்மையான வர்த்தக கண்காட்சி, கோயம்புத்தூரில் தற்போது நடைபெற்று வருகிறது.

மூன்று சிலிண்டர்கள் கொண்ட 28 ஹெச்பி டிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விஎஸ்டி 929 டிஐ இஜிடி டிராக்டர், 28 ஹெச்பி வகையினத்தில் மிக அதிக சக்தியையும் மற்றும் முறுக்குத் திறனையும் வழங்குகிறது. இதன் வகையினத்தில் மிகச்சிறந்த எரிபொருள் திறன் கொண்டதாக இப்புதிய டிராக்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இரட்டை செயல்பாடுள்ள பவர் ஸ்டீயரிங், சிறப்பான ஸ்டைலிங் மற்றும் சௌகரியமான எர்கானமிக் அம்சங்கள்ஆகியவை விஎஸ்டி 929 டிஐ இஜிடி டிராக்டரின் சிறப்பம்சங்களாகும்.

இலகுரக எடை கொண்ட இப்புதிய காம்பேக்ட் டிராக்டர், பல்வேறு பயன்பாடுகளுக்கும் மிகப் பொருத்தமானதாக திகழ்கிறது. விவசாயப் பணியில் மருந்து, உரம் தெளிப்பிற்கான ஸ்பிரேயர், வயலை பன்படுத்துவதற்கான கல்ட்டிவேட்டர், ரோட்டவேட்டர், விதைப்புக்கான சீடு டிரில் மற்றும் பிற இணைப்பு சாதனங்களோடு இதனை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தலாம். கரும்பு, சோளம், சோயாபீன், திராட்சை, மாம்பழம், பாக்கு, மாதுளை மற்றும் பருத்தி ஆகியவை பயிரிடும் வயல்களிலும், தோட்டங்களிலும் விரிவாக பயன்படுத்துவதற்கு இவ்வகையினத்திலேயே மிகச்சிறந்த அம்சங்களை இந்த கச்சிதமான டிராக்டர் விவசாயிகளுக்கு வழங்குகிறது.

சிறந்த எரிபொருள் திறனுடன், அதிக முறுக்குத்திறன் கொண்ட இன்ஜின், சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் தனித்துவமான உற்பத்தி திறன் அம்சங்களுடன் விஎஸ்டி 929 டிஐ இஜிடி உருவாக்கப்பட்டிருக்கிறது. தனித்துவமான சிறப்பம்சங்களே இதன் வகையினத்தில் மிகச்சிறந்த தயாரிப்பாக இந்த டிராக்டரை நிலைநிறுத்துகிறது. இந்திய விவசாயிகளுக்கு உற்பத்தி திறனையும், வருவாயையும் மேலும் மேம்படுத்துகின்ற மற்றுமொரு சிறப்பான தயாரிப்பாக விஎஸ்டி 929 டிஐ இஜிடி டிராக்டர் திகழ்கிறது.

30-க்கும் அதிகமான ஸ்மார்ட்டான, விவசாயிகளுக்கு அதிக பயனளிக்கும் தோழமையான அம்சங்களுடன் இந்திய காம்பேக்ட் டிராக்டர் சந்தையில், அதிக புத்தாக்க அம்சங்கள் நிறைந்த தயாரிப்பாக வெளிவரும் புதிய விஎஸ்டி 929 டிஐ இஜிடி ஐடிராக் டிராக்டரை வாங்க முன்பதிவு செயல்முறை தொடங்கப்பட்டிருப்பதையும் விஎஸ்டி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க