August 30, 2017
தண்டோரா குழு
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகனங்களை ஓட்டுவோர் அசல் ஓட்டு உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.