July 17, 2017
தண்டோரா குழு
அஜித் போல் ஏன் கமலுக்கு தைரியம் இல்லை என சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் கமலை அஜித்துடன் ஒப்பிட்டு விமர்ச்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில், கமல் தொடர்ந்து அரசியல் பற்றிய தன்னுடைய கருத்தையும் கூறி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என ஆளும் கட்சியை விமர்சித்தார்.
இதற்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் கடுமையாக கமலை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் கமலை அஜித்துடன் ஒப்பிட்டு விமர்ச்சித்துள்ளார்.
அவர் கூறும்போது, கலைஞர் ஆட்சியில் அஜித் தன்னை மிரட்டி இங்கு வரவைத்துள்ளதாக மேடையிலேயே கூறினார்.அதே போல் தைரியம் ஏன் கமலிடம் இல்லை என கேள்வி எழுப்பினார்.மேலும், குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கு தகுந்த பதில் சொல்லுவோம் என கூறியுள்ளார்.