February 22, 2017
அதிமுகவினருக்கு வந்ததொலைபேசி அழைப்புகள்பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாற்றியுள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சிமற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டஅதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக ஆட்சியைகலைத்துவிட்டு திமுக ஆட்சியை கொண்டுவர குறுக்குவழியில் திமுகவினர்முயற்சி செய்கின்றனர்.
திமுகவினரின் சூழ்ச்சிகளை ஓற்றுமையாகஇருந்து முறியடிப்போம். கோவை மாவட்டத்திற்கு எனஏராளமான திட்டங்களை ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அதில் மெட்ரோரயில், அத்திகடவு அவினாசி திட்டம்,ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,விமானநிலைய விரிவாக்கம் போன்றவைகளை நிறைவேற்ற கடமைகள் அதிமுகவிற்கு இருக்கின்றது.
தொகுதி மக்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் தனக்கு போன் செய்துபேசி வருகின்றனர். அவர்களது தொலைபேசி எண்கள் சைபர்கிரைம் காவல்துறையிடம்ஓப்படைக்கப்பட்டுள்ளது. திமுகவினரே இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிமுகவினருக்கு வந்ததொலைபேசி அழைப்புகள்பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருகின்றார். தலைமை மூலம்காவல்துறையில் புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் குடிநீர் பிரச்சினை 2 மாதங்களுக்கு இருக்காதுஎனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 300 விவசாய கிணறுகள் மூலம் 100மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட இருப்பதாகவும், லாரிகள் மூலம்தினமும் 3500 டிரிப்பாக இருக்கும் தண்ணீர் விநியோகத்தை 6500டிரிப்பாகஉயர்த்த இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி அப்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜ், எடப்பாடிஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.