August 10, 2017
தண்டோரா குழு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவரை அதிமுகவில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கிடையில், தினகரன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சசிகலாவால் கட்சியில் பதவிபெற்ற செங்கோட்டையன், சண்முகம், ஜெயக்குமார் பதவியில் இருந்து விலக வேண்டும். சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளருக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு என எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அதைப்போல் தினகரன் பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.தினகரன் பதவி செல்லாது என்றால், அவரை ஆர்.கே.நகர் தேர்தலின் போது வேட்பாளராக தேர்வு செய்தது ஏன்? என தினகரன் ஆதரவாளர், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.