February 13, 2017
தண்டோரா குழு
அதிமுக இரு அணியாக பிரிந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொள்ளை தொடரும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் திமுக உயர்நிலைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் க. அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூடத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:
திமுக உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளன. தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளைக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவிக்குச் சண்டையிட்டு வருகிறார்.
ஆளுநர் அரசியல் சட்டப்படி நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை திமுக கொடுத்துள்ளது.
சசிகலாவுக்குப் பதில் சொல்லி என் தரத்தைக் குறைத்து கொள்ள விரும்பவில்லை. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொள்ளை தொடரும்“.
இவ்வாரு ஸ்டாலின் தெரிவித்தார்.