• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார்- கே.சி.பழனிச்சாமி

March 3, 2023 தண்டோரா குழு

திமுக ஆட்சி மீதான அதிருப்தி உள்ளிட்ட பல சாதக அம்சங்கள் இருந்தும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உட்கட்சி பூசலால் அதிமுக வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர்,

இதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்றதாகவும், ஆனால் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு சந்தித்த ஊரக உள்ளாட்சி, 2019 நாடாளுமன்றம், 2021 சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலில் தொடர் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டவர், அதிமுக கட்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலையீடு உள்ளதாகவும், அதிமுக பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார் என்று கேள்வி எழுப்பினார்.

திமுக மத்தியில் ஆட்சி அமைக்க தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்து பயணித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த பைலாவை, கொள்கையை செயல்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில், மிகப்பெரிய ஆளுமையாக திமுகவை,ஸ்டாலினை கொண்டு வர பிரதமரே வழிவகுப்பதாக அமையும் என்றவர், சுமார் ஒரு லட்சம் பேர் கட்சிகளில் இருந்து நீக்கிய அனைவரையும் மீண்டும் சேர்த்து, எடப்பாடி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பெரியளவில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை இல்லை என்றும்,உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கலாம், மக்கள் மன்றத்தில் வெற்றிப்பெற தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்றவர், பொதுக்குழுவையும், இரட்டை தலைமையை கலைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஓராண்டிற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தி,அதிமுகவில் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில் தலைமை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் மறைமுக உறவு உள்ளதால் தான் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறி 3 ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டியவர்,2023 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உள்ள 12 மாதங்களில் வலிமைப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபட வேண்டும் என்றார். குறுகிய காலத்திலேயே மக்களின் அதிருப்தியை பெற்ற திமுக தங்கள் மீதான ஊழல், சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிரைவேற்றாமல் இருக்கவே, மதவாத சக்தி, பாஜகவிற்கு எதிராக ஒன்றினைய வேண்டும் என உணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி உட்பட மக்களிடம் சென்று சேரும் விதமான பேச்சாற்றல் திறன் கொண்ட ஆளுமைகள் அதிமுகவில் இல்லாததும் ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என்றவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையீடு இல்லாமல் பிரதமர் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க