September 12, 2017 தண்டோரா குழு
அதிமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் செல்லுபடியாகாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அவர் இல்லாததால் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு மட்டுமே உள்ளது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டவை என்பதால், உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அவை செல்லாது.
மேலும்,துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்துள்ள ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆட்சியைக் கலைத்து தேர்தலைச் சந்தித்தால் அவர்களால் டெபாசிட் கூட வாங்க இயலாது. ஆளுநர் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.