• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து ரேசன் கடைகளிலும் கண்காணிப்பு குழு அமைக்க கோரிக்கை

September 30, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் காணொளி மூலமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் செயலர் லோகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

அனைத்து ரேசன் கடைகளிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அதுபோல மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். அவிநாசி சாலையில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது எனவே சாலை நடுவே தடுப்பு கற்கள் அமைக்க வேண்டும். கோவையில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களில் பலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருபவரிடம் பணத்தை கேட்டு மிரட்டுவது அதிகரித்து வருகிறது.

கோவை மாநகராட்சி முழுவதும் சாக்கடைகள் மேல் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாக்கடை தூர் வார வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க