• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்காடமியின் “கோட்செப் ஸ்னேக்டவுன் 2021” அறிவிப்பு – போட்டியில் வெல்பவருக்கு 10000 டாலர் பரிசு

September 17, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் மாபெரும் கற்றல் தளமாக உள்ள அன்காடமி, தனது ஆறாவது பதிப்பாக ஸ்னேக்டவுன், என்ற பன்னோக்கு சுற்று திட்ட போட்டியை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாற்றுவோர் பங்கேற்கலாம்.

ஸ்னேக்டவுன் போட்டியை, 2010ம் ஆண்டில் கோட்செப், சிறந்த புராகிராமர்களை ஒருவருடன் ஒருவர் போட்டியாக உலகளவில் தேர்வு செய்ய துவக்கினார். இந்த போட்டியை கடந்த ஜூன் 2020-ல், அன்காடமி முழுமையாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தியது.

பதிவு மற்றும் கால அட்டவணை
ஸ்னேக் டவுன் 2021 போட்டியில் பங்கேற்க 2021 அக்டோபர் 19 வரை பதிவு செய்து கொள்ளலாம். முதலாவது தகுதி ஆன்லைன் சுற்று, அக்டோபர் 14 முமதல் 19 வரை நடக்கிறது. இறுதிச்சுற்று தேர்வு 2022 ஜனவரி 9 ல் நடக்கிறது. முழுமையான கால அட்டவணை மற்றும் தேர்வுக்கு தயாராக தேவையான வழிகாட்டுதல்கள் இணைய தளத்தில் உள்ளது.

பரிசுகள் விபரம்:

இந்த ஆண்டு ஸ்நேக் டவுன் 2021 போட்டி, தொற்று பரவாமல் பாதுகாக்க, குழு போட்டியில்லாமல், ஒவ்வொருக்கும் தனித்தனி போட்டியாக நடத்தப்படுகிறது. ஸ்நேக்டவுன் 2021 சாம்பியனாக தேர்வு செய்யப்படுபவர், ரூபாய்.10,000 மற்றும் தங்க கோப்பையை பெறுவர். இரண்டாவது மற்றும் 3வது பரிசுகள் முறையே ரூபாய். 7500 மற்றும் ரூ.5000 பரிசு தொகை மற்றும் கோப்பைகளை பெறுவர். இந்தியாவின் முதல் 10 இடங்களை பிடிப்பவர்கள், மற்றும் சர்வதேச அளவில் 4 முதல் 25 தரவரிசையில் இடம் பெறுவர் ரொக்க பரிசுகளை பெறுவர்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் SnackDown 2021 website இணையத்தளத்தை பார்வையிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க