July 29, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் நடைபெறும் இலவச திறன் பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்கள் (இருபாலரும்) தகுதியான இலவச பயிற்சியினை தேர்வு செய்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
அன்னூர் வட்டார அளவில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழா கோவை அன்னூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.ஜி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வரும் 30ம் தேதி அன்று காலை 9 மணி முதல் முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வெர்ஹவுஸ் சுப்பர்வைசர், மொபைபல் போன் ஆப்ரேட்டர், உதவி கேட்டரிங் மேலாளர், ப்யூட்டி பார்லர் மேனேஜ்மெண்ட், மெழுகுவர்த்தி தயாரித்தல், ஊறுகாய், பவுடர் போன்றவைகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன.
இளைஞர் திறன் திருவிழாவில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர தகுதிச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தகவலை ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.