March 28, 2016 P.M.முகமது ஆஷிக்
இந்திய அணி T2௦ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
அப்போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வாய்த்த விராட் கோலிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள்
குவிந்தன. மேலும்அவரின் ஆட்டத்தை உலகின் பல பிரபலங்களும் புகழ்ந்து வருகிறார்கள்.
இதைப்போல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் டிவிட்டரில் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.ஆனால் இங்கிலாந்தின்
முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரு பிளின்டாப் கோஹ்லியை மட்டம் தட்டும் வகையில் ஒரு டிவிட் போட்டிருந்தார். அதில் “கோஹ்லி இது போல் தொடர்ந்து விளையாடினால் ஒருநாள் ஜோ ரூட்டுக்கு நிகராக வந்துவிடுவார்” என்று ஒரு டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த டுவிட்டில் மறைமுகமாக அவர் கோலியை மட்டம் தட்டியிருந்தார். இதனால் கடும் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் பலர் ப்ளிண்டாப்பை திட்டியவாறு டிவிட்டரில் கலாய்த்தனர்.
இதனால் இங்கிலாந்தின் ஜோ ரூட் பெரிய வீரரா, அல்லது இந்தியாவின் கோஹ்லி திறமையான வீரரா என்பதில் பெரும்
மோதலே வெடித்தது.
ப்ளிண்டாபின் டிவிட்டை பார்த்த அமிதாப் பச்சனுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே “ஜோ ரூட்டா யாரது? ஒருவேளை இறுதிப்
போட்டியில் இரு அணிகளும் சந்தித்தால் இந்தியா அவரை வேரோடு பிடுங்கிவிடும் (அப்ரூட்)” என்று,பிளின்டாப்பின் டிவிட்டர் பக்கத்தை இணைத்து, பதில் டிவிட் செய்தார்.
ஆனால் ப்ளிண்டாப் மீண்டும் நக்கலாக “ மன்னிக்கவும் யார் அது அமிதாப் “ என்று அமிதாப்பச்சனுக்கு ட்விட் செய்தார்.
இதனால் சூடான அமிதாப்பச்சன் ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் ப்ளிண்டாபை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.